ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை
ஆலங்குளம் பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழை
ஆலங்குளம், சுண்டங்குளம், ஏ.லட்சுமிபுரம், கோபாலபுரம், புளியடிபட்டி, ராசாப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, கரிசல்குளம், கொங்கன்குளம், அம்பேத்கர் நகர், பெரியார் நகர், அண்ணாநகர், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதிநகர், இந்திராநகர், சீவலப்பேரி, கண்மாய் பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது.
இதனால் சிறிய ஊருணிகளில் தண்ணீர் நிரம்பியது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தால் ெபாதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த மழை விவசாய பணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். ஆதலால் அவர்கள் சாகுபடி பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story