வெம்பக்கோட்டையில் இன்று மின்தடை


வெம்பக்கோட்டையில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 20 Aug 2021 7:41 PM GMT (Updated: 20 Aug 2021 7:41 PM GMT)

வெம்பக்கோட்டையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை செய்யப்படுகிறது.

சிவகாசி, 
மின்சார வாரியத்தின் சிவகாசி பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி கோட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, செவல்பட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் செவல்பட்டி, அப்பைய நாயக்கன்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம்மீனாட்சி புரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story