தம்பிக்கு அரிவாள் வெட்டு; அண்ணனுக்கு போலீஸ் வலைவீச்சு


தம்பிக்கு அரிவாள் வெட்டு; அண்ணனுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Aug 2021 1:36 AM IST (Updated: 21 Aug 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளிபத்து பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல் மகன் ஆதித்தன் (வயது 65). இவருக்கும் அவரது அண்ணன் பொன்பெருமாளுக்கும் (70) கடந்த 10 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறதாம். இந்தநிலையில் பொன் பெருமாள், தம்பி ஆதித்தன் தனக்கு செய்வினை வைத்ததாக கூறி அடிக்கடி அவரிடம் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

நேற்று காலை ஆதித்தன் வீட்டு முன் முற்றத்தை பெருக்கி கொண்டிருந்தபோது அவரது அண்ணன் பொன்பெருமாள் அரிவாளுடன் வந்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தம்பிக்கு இடது கையில் வெட்டு விழுந்தது. தொடர்ந்து அவர் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். அருகில் இருந்தவர்கள் ஆதித்தனை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆதித்தன் தட்டார்மடம் போலீஸ நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பொன்பெருமாளை தேடி வருகிறார்.

Next Story