அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்


அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 21 Aug 2021 2:29 AM IST (Updated: 21 Aug 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா அரசின் வழிகாட்டுதலின்படி நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்தாமரைகுளம், 
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா அரசின் வழிகாட்டுதலின்படி நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதலும், 5 மணிக்கு நடைதிறப்பும், 6 மணிக்கு கொடி பட்டம் தயாரித்தலும், பின்னர் கொடிப் பட்டம் தலைமைப் பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. அதை தொடர்ந்து காவி உடை தரித்த அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ சிவ, அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்திற்கிடையே கொடியேற்றம் நடைபெற்றது. 
பால.ஜனாதிபதி தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். ராஜவேல், பால.லோகாதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசின் வழிகாட்டுதலின்படி குறைவான பக்தர்களுடன் எளிய முறையில் கொடியேற்றம் நடைபெற்றது. 
வாகன பவனி
தொடர்ந்து வாகன பவனியும், வடக்கு வாசலில் அன்னதானமும் நடைபெற்றது. பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த் ஆகியோர் செய்திருந்தனர். இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் 2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) இரவு வைகுண்ட சாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அன்ன வாகன பவனியும், 4-ம் நாள் விழாவில் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதலும், 5-ம் நாள் விழாவில் பச்சை சாற்றி சப்பர வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும், 6-ம் நாள் கற்பக வாகனத்தில் பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
கலிவேட்டை
வருகிற 27-ந் தேதி 8-ம் விழா நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் நாள் விழாவில் இரவு அனுமன் வாகன பவனியும், 10-ம் நாள் விழாவன்று இரவு இந்திர வாகன பவனியும் நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் காலை, மாலை பணிவிடையும், இரவு வாகன பவனியும் நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு எளிய முறையில் நடைபெறுகிறது.

Next Story