ராஜமுத்து எம்.எல்.ஏ.வின் தந்தை மரணம் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
ராஜமுத்து எம்.எல்.ஏ.வின் தந்தை மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பனமரத்துப்பட்டி
வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்துவின் தந்தை முத்துசாமி வயது முதிர்வு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக சேலம் அமானி கொண்டலாம்பட்டி, காட்டூரில் உள்ள எம்.எல்.ஏ.வின் வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. முத்துசாமியின் உடலுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணியன் (சேலம் தெற்கு), ஜெய்சங்கர் (ஆத்தூர்), மணி (ஓமலூர்), சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் ஜெகநாதன் (பனமரத்துப்பட்டி மேற்கு), வரதராஜ் (வீரபாண்டி மேற்கு), வையாபுரி (சேலம்), பாலச்சந்திரன் (பனமரத்துப்பட்டி கிழக்கு), வெங்கடேசன் (வீரபாண்டி கிழக்கு) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story