ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் மின்சார ரெயில் சேவை; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிகள் பயணிக்கும் வகையில் சென்னை சென்டிரல்-அரக்கோணம் மார்க்கத்தில் 22-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. அந்தவகையில் ஏற்கனவே 165 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக சென்னை கடற்கரை-ஆவடி, ஆவடி-சென்னை கடற்கரை இடையே தலா 2 மின்சார ரெயில் சேவைகளும், சென்னை கடற்கரை-திருவள்ளூர், திருவள்ளூர்-கடற்கரை இடையே தலா 6 சேவைகளும், மூர்மார்க்கெட்-திருத்தணி, திருத்தணி-மூர்மார்க்கெட் இடையே தலா 2 சேவைகளும் என கூடுதலாக 20 சேவைகள் அதிகரிக்கப்பட்டு, 22-ந்தேதி முதல் 185 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story