நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் குப்பைகள் கொட்டியவர்களிடம் ரூ.12 ஆயிரம் அபராதம் வசூல்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை


நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் குப்பைகள் கொட்டியவர்களிடம் ரூ.12 ஆயிரம் அபராதம் வசூல்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Aug 2021 1:03 PM IST (Updated: 21 Aug 2021 1:03 PM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழி கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பருவமழை காலத்துக்கு முன்னதாகவே சென்னை மாநகராட்சி சார்பில் இந்த நீர்வழி கால்வாய்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், வண்டல்கள் மற்றும் குப்பைகள் ஆகியவை நவீன இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு, தண்ணீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்படி அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவின் களஆய்வு அறிக்கையில் பெருங்குடி ஏரியிலும், ஏரியை சுற்றிலும் குப்பை மற்றும் கட்டிடக்கழிவுகளை போடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், திடக்கழிவு மேலாண்மை விதியின் கீழ் அபராதம் விதிக்குமாறும் பரிந்துரைத்தது. அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி அலுவலர்களால் கடந்த 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதிகளில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பெருங்குடி ஏரி மற்றும் அதனைச்சுற்றிலும் குப்பை மற்றும் கட்டிடக்கழிவுகளை கொட்டிய 21 நபர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களில் பொதுமக்கள் குப்பை மற்றும் கட்டிடக்கழிவுகளை கொட்டக்கூடாது. மீறினால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story