போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
தினத்தந்தி 21 Aug 2021 1:11 PM IST (Updated: 21 Aug 2021 1:11 PM IST)
Text Sizeசென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 57). இவர், ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று மதியம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சார்லசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவருக்கு சாந்தி (53) என்ற மனைவியும், அவினாஷ் (29) மற்றும் ஹரிஷ் (27) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire