சைபர் குற்றங்களை கண்டறியும் சிறப்பு முகாம்; போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது


சைபர் குற்றங்களை கண்டறியும் சிறப்பு முகாம்; போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 21 Aug 2021 11:32 AM GMT (Updated: 21 Aug 2021 11:32 AM GMT)

சைபர் குற்றங்களை கண்டறியும் சிறப்பு முகாம், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சமூக வலைதளங்களில் நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்து ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த இந்த முகாமுக்கு, சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். சைபர் குற்றங்கள் பற்றியும், அதில் என்னென்ன வழிகளில் குற்றங்களை கண்டுபிடிக்கலாம் என்பது பற்றியும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 8 உட்கோட்டங்களில் தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய 4 உட்கோட்டங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். முகாமில் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், டெலிகிராம், சிக்னல் போன்ற சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்களை எவ்வாறு கண்டறிவது? என்பது பற்றியும், சைபர் குற்றங்கள் குறித்த சட்டங்கள் மற்றும் விதிகள் பற்றியும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், சைபர் குற்றப்பிரிவு மற்றும் தொழில்நுட்ப சப்-இன்ஸ்பெக்டர்கள், சைபர் குற்றப்பிரிவினர் பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

Next Story