குலசேகரன்பட்டினம் கடற்கரை பள்ளிவாசலில் யானை உடல் அடக்கம்


குலசேகரன்பட்டினம் கடற்கரை பள்ளிவாசலில் யானை உடல் அடக்கம்
x
தினத்தந்தி 21 Aug 2021 8:04 PM IST (Updated: 21 Aug 2021 8:04 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் கடற்கரை பள்ளிவாசலில் யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் தனியாருக்கு சொந்தமான 41 வயதான பெண் யானை பவானி இருந்தது. இந்த யானை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் விழா, கந்தூரி விழா மற்றும் உடன்குடி பகுதியில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு யானைக்கு காலில் புண் ஏற்பட்டது. இதனையடுத்து கால்நடை துறையை சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அதற்கான மருத்துவ சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் யானை பவானி பரிதாபமாக உயிரிழந்தது.
நேற்று காலை கடற்கரையில் உள்ள செய்யது சிராஜூதீன் ரலியல்லா அன்ஹூ பள்ளிவாசல் தர்கா வளாகத்தில் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல், வனச்சரக அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் கால்நடை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சம்பத்குமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் சந்தோஷ் முத்துக்குமார், திருச்செந்தூர் கோட்ட கால்நடை பராமரிப்பு உதவி உதவி இயக்குனர் டாக்டர் செல்வகுமார் மற்றும் கால்நடை டாக்டர்கள் பொன்ராஜ், ரஞ்சித்குமார், சத்தியா ஆகியோர் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் பள்ளிவாசலில் யானை பவானி அடக்கம் செய்யப்பட்டது. இறந்த யானை பவானிக்கு அப்பகுதி பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

Next Story