தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது


தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2021 8:33 PM IST (Updated: 21 Aug 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி

ஆனைமலை அருகே தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பொதுஇடத்தில் மதுகுடித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் தாக்கியது தெரியவந்துள்ளது.

பொதுஇடத்தில் மதுகுடித்தனர்

ஆனைமலை அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 36). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வழித்தடத்தில் சிலர் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாக தெரிகிறது.

பொதுஇடத்தில் மதுகுடித்தது குறித்து, கதிர்வேல் அவர்களிடம் தட்டி கேட்டார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி மதுகுடித்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தொழிலாளி மீது தாக்குதல்

இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் கதிர்வேல் வேலைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது மது அருந்தி கொண்டிருந்த நபர்கள் கதிர்வேலிடம் மது குடிப்பதை போலீசில் சொல்லி கொடுத்தது தொடர்பாக கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது ஒருவர் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் கதிர்வேலின் தலையில் தாக்கினார். சத்தம் கேட்டு கதிர்வேலின் சித்தப்பா முருகன் என்பவர் அங்கு வந்தார். அவரையும் அந்த கும்பல் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. 

இதை தொடர்ந்து பீர் பாட்டிலால் தாக்கியதில் படுகாயமடைந்த கதிர்வேலை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

4 பேர் கைது

இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் கதிர்வேல் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

 விசாரணையில் களத்துப்புதூரை சேர்ந்த செல்வகுமார், பெரியார் நகர் கார்த்திக், மஞ்சுநாதன், அசோகன் ஆகியோர் சேர்ந்து கதிர்வேலை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story