கொரோனா தடுப்பு விதிகளை மீறி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 பேர் மீது வழக்கு ஓசூர் போலீசார் நடவடிக்கை
கொரோனா தடுப்பு விதிகளை மீறி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடத்திய பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 பேர் மீது ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓசூர்:
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி ஓசூரில் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நேற்று முன்தினம் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஓசூர் டவுன் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக புகாரில் கூறியிருந்தார். அதன் பேரில் டவுன் போலீசார் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் உள்பட 350 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story