76 பேருக்கு கொரோனா


76 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Aug 2021 10:00 PM IST (Updated: 21 Aug 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

திருப்பூர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. தற்போது மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் சுழற்சி முறையில் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தமிழத்தில் நேற்று ஒரே நாளில் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோவை, திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 606-ஆக உயர்ந்துள்ளது. 
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 87 பேர் நேற்று குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 844-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 851 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 911-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story