மரத்தில் கார் மோதி பால்பண்ணை மேலாளர் பலி


மரத்தில் கார் மோதி பால்பண்ணை மேலாளர் பலி
x
தினத்தந்தி 21 Aug 2021 11:08 PM IST (Updated: 21 Aug 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் பால்பண்ணை உதவி மேலாளர் பலியானார்.

பல்லடம்
பல்லடம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் பால்பண்ணை உதவி மேலாளர் பலியானார்.
இந்த விபத்து குறித்து  போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பால்பண்ணை உதவி மேலாளர்
 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தேவராஜ் மகன் முகிலன் (வயது 39).  இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பால்பண்ணையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரும், அதே பால்பண்ணையில்  வேலை பார்க்கும் மற்றொரு உதவி மேலாளர் அகிலேஸ்வரனும் (35)  பொங்கலூர் பகுதியில் பால் சேகரிப்பு மையங்களில் ஆய்வு செய்வதற்காக பால்பண்ணைக்கு சொந்தமான காரில் வந்தனர். காரை பொள்ளாச்சியைச் சேர்ந்த நாகராஜ் (39) என்பவர் ஓட்டினார். 
 பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரின்  முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதியில்  அமர்ந்திருந்த முகிலனுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. 
பலி
உடனே அருகில் உள்ளவர்களும், பல்லடம் போலீசாரும் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முகிலனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  காயம் அடைந்த அகிலேஸ்வரன், டிரைவர் நாகராஜ் ஆகியோருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது. 
இந்த விபத்து குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் பலியான முகிலனுக்கு மனைவி, குழந்தைகள் 2 பேர் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story