பனை மரம் வெட்டிய 2 பேர் கைது


பனை மரம் வெட்டிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2021 11:41 PM IST (Updated: 21 Aug 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

பனை மரம் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பனைக்குளம், 
உச்சிப்புளி அருகே கடுக்காய் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது49). சாத்தக்கோன் வலசை அய்யனார் கோவில் அருகே இவருக்கும், இவரது உறவினருக்கும் சொந்தமான  நிலம் உள்ளது. அங்கு1,200 பனை மரங்கள் இருந்து வந்துள்ளது. தினந்தோறும் இவர் தோப்பிற்கு சென்று வருவது வழக்கம். அதே போல் நேற்று தோப்புக்கு சென்ற போது அங்கிருந்த 140 பனைமரங்கள் வெட்டப்பட்டு இருந்தது.  இது குறித்து ரவிசங்கர் உச்சிப்புளி போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நாகாட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் (53), தேவிபட்டிணம் அப்புசாமி (50), இருமேனி காத்தமுத்து (30) ஆகியோர் பனை மரங்களை வெட்டியது தெரிய வந்தது. இதையடுத்து உச்சிப்புளி போலீசார் விசாரணை நடத்தி ராஜேந்திரன், அப்புசாமி ஆகிய 2 பேரை கைது செய்து காத்தமுத்துவை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story