பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு
பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சூரங்கோட்டை காலனி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி பேச்சிமுத்து (வயது55). இவர் சித்தூர் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் பிள்ளையார்கோவில் பஸ்நிறுத்தத்தில் இருந்து டவுன்பஸ்சில் ஏறி சென்றார். பஸ் டெப்போவிற்குள் சென்று டீசல் போட்டுக்கொண்டு புறப்பட்டு சென்றது. அப்போது பஸ்சில் இருந்த 3 பெண்கள் பேச்சிமுத்துவை இடித்துக்கொண்டு நின்றுள்ளனர். அவர்களை பேச்சி முத்து சத்தம்போட்டு விலகி நிற்கும்படி கூறியுள்ளார். இந்த பெண்கள் அடுத்த பஸ்நிறுத்தமான கூரியூரில் இறங்கி சென்றுவிட்டனர். அவர்களை தொடர்ந்து அடுத்த பஸ்நிறுத்தமான லாந்தை பகுதியில் 2 ஆண்கள் இறங்கினர். இதன்பின்னர் பஸ் சந்தவழியான் கோவில் அருகே சென்றபோது பேச்சிமுத்து தற்செயலாக தனது கழுத்தை பார்த்தபோது தான் அணிந்து வந்த 5 பவுன் தங்க நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வழியில் இறங்கிய பெண்கள் அல்லது ஆண்கள் யாராவது திருடிச்சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து பேச்சிமுத்து ராமநாதபுரம் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story