ஆலங்குடி அருகே வீட்டில் இருந்த 6 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


ஆலங்குடி அருகே  வீட்டில் இருந்த 6 பவுன் நகை திருட்டு  மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Aug 2021 12:38 AM IST (Updated: 22 Aug 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி அருகே வீட்டில் இருந்த 6 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்யாணபுரத்தை சேர்ந்தவர் துரைமுருகன்-கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பெட்டியில் வைத்திருந்த 6 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது பெட்டி திறந்து கிடந்தது. 
இதுகுறித்து துரைமுருகன் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story