சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கோர்ட்டு பணிகள் குறித்தும் கட்டிட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கோர்ட்டு பணிகள் குறித்தும் கட்டிட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வு
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சீப் பானர்ஜி நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். ராமேசுவரம் கோர்ட்டில் ஆய்வு செய்த அவர் பல்வேறு பணிகள் குறித்து நீதிபதிகள் மற்றும் கலெக்டர் சந்திரகலா, போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோருடன் ஆய்வு செய்தார்.
இதன்பின்னர் நேற்று காலை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி ராமநாதபுரம் வந்தார். அவரை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம், சட்டபணிகள் ஆணைக்குழு நீதிபதி மகிழேந்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், குடும்ப நல நீதிபதி பகவதி அம்மாள், தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா, சப்-கோர்ட்டு நீதிபதி கதிரவன், நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி சிட்டிபாபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லை ஆகியோர் வரவேற்றனர்.
இதன்பின்னர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி முதன்மை மாவட்ட நீதிமன்ற பணிகளை ஆய்வு செய்தார். மேலும், ராமநாதபுரம் வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, முனியசாமி உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார்.
அறிவுரை
கோர்ட்டுகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், லோக் அதாலத் நிகழ்வில் சமரச வழக்குகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதன்பிறகு நீதிமன்ற நடைமுறைகளை பின்பற்றும் விதம் குறித்து அனைத்து கோர்ட்டு பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள சில கோர்ட்டுகளுக்கு நேரில்சென்று ஆய்வு செய்ய உள்ளதாக கோர்ட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வருகையையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story