4 மாத கைக்குழந்தை கிணற்றில் வீசி கொலை


4 மாத கைக்குழந்தை கிணற்றில் வீசி கொலை
x
தினத்தந்தி 22 Aug 2021 12:41 AM IST (Updated: 22 Aug 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே 4 மாத கைக்குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது. தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டார்.

பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே 4 மாத கைக்குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது. தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டார்.

கூலி தொழிலாளி

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியபாண்டியன் (வயது 33). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தங்கசெல்வி (30). இவர்களுக்கு கார்த்திக் (5) என்ற மகனும், கனுஷ்கா என்ற 4 மாத கைக்குழந்தையும் இருந்தனர்.

நேற்று அதிகாலை தங்கசெல்வியையும், அவரது 4 மாத கைக்குழந்தையையும் வீட்டில் காணவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.

கிணற்றில் தத்தளித்தார்

அப்போது மருக்காலங்குளம் ஊருக்கு மேற்குப்பகுதியில் உள்ள செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தங்கசெல்வி தண்ணீரில் தத்தளித்தபடி கிடந்ததையும், அவரது குழந்ைத கனுஷ்கா தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கிணற்றில் வீசி கொலை

அவர்கள் கயிறு கட்டி தங்கசெல்வியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும், குழந்தை கனுஷ்காவின் உடலும் மீட்கப்பட்டது. லேசான காயம் அடைந்த தங்கசெல்வி சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தை கனுஷ்காவை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தங்கசெல்வி தற்ெகாலைக்கு முயன்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தங்கசெல்வி தற்ெகாலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story