போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி, ஆக.22-
திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
போதை மாத்திரைகள்
திருச்சி மாநகரில் போதைமாத்திரை விற்றதாக கடந்த மாதம் 7 பேர் கொண்ட கும்பலை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், ஊசிகள் மற்றும்5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உறையூர் வடிவேல் நகரை சேர்ந்த குமார் (வயது 23), வரகனேரி பஜார் தெற்கு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ராம்நாத் (31), திருச்சி உறையூர் சாலை ரோட்டில் எம்.ஏ.எம். அவென்யூவை சேர்ந்த சக்திதாசன் (31) ஆகிய 3 பேரும் தொடர்ந்து இதுபோன்று மருந்துகளை வாங்கி போதை மருந்தாக இளைஞர்களுக்கு வினியோகம் செய்யும் குற்றச்செயலில் ஈடுபடக் கூடியவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இதனால் அவர்கள் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள கோட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், அந்த 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி சிறையில் உள்ள அவர்கள் 3 பேருக்கும் மருந்து சரக்கு குற்றவாளிகள் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ததற்கான ஆணை வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story