போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வருபவர்களை சிறையில் அடையுங்கள்; அதிகாரிகளுக்கு, மந்திரி எஸ்.டி.சோமசேகர் உத்தரவு
கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வருபவர்களை சிறையில் அடையுங்கள் என்று கூறி அதிகாரிகளுக்கு மந்திரி எஸ்.டி.சோமசேகர் உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளேகால்:
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து சாம்ராஜ்நகர் வழியாக கர்நாடக மாநிலத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு வருவோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இருந்தாமல் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் சிலர் போலி சான்றிதழ் கொடுத்து கர்நாடகாவுக்குள் நுழைய முயற்சிப்பது அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் குண்டலுபேட்டையில் உள்ள மூலஹொளே சோாதனைச்சாவடிக்கு நேற்று மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
அப்போது, கேரளாவில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. எனவே, அங்கிருந்து கர்நாடகாவுக்கு வருவோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்க வேண்டும்.
சிலர் போலி சான்றிதழ் கொடுத்து கர்நாடகாவுக்கும் நுழைய முயற்சிப்பதாக கூறப்படுகிறது. போலி சான்றிதழ் கொடுத்து கர்நாடகத்துக்குள் நுழைய முயற்சிப்போர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடையுங்கள் என்று கூறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story