6 மாதத்திற்குள் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
6 மாதத்திற்குள் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு:
ஆள் பற்றாக்குறை
பெங்களூரு மடிவாளா பகுதியில் மாநில தடய அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது. குற்றச்சம்பவங்களில் சேகரிக்கப்படும் கைரேகைகள் இங்கு தான் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த மையத்தில் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அங்கு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் அங்கு நிலுவையில் உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.
மேலும் குற்றங்கள் நடக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்ய அனைத்து போலீஸ் நிலையங்களிலும் விசாரணை அதிகாரிகள் இருப்பார்கள். அவர்கள் தடய அறிவியல் மையத்தினருக்கு உதவி செய்து வந்தனர். இந்த நிலையில் போலீஸ் நிலையங்களிலும் விசாரணை அதிகாரிகள் இடங்கள் காலியாக உள்ளது.
6 மாதத்திற்குள்....
இந்த நிலையில் போலீஸ் நிலையங்களில் காலியாக உள்ள விசாரணை அதிகாரிகள் பணி இடங்களை நிரப்ப உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அபய் சீனிவாஸ் ஒகா, சுரஜ் கோவிந்தராஜ் முன்னிலையில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அடுத்த 6 மாதத்திற்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story