இருதரப்பினரிடையே மோதல்; பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு


இருதரப்பினரிடையே மோதல்; பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Aug 2021 3:35 AM IST (Updated: 22 Aug 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

இருதரப்பினரிடையே மோதல் தொடர்பாக பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:

வாக்குவாதம்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் காஞ்சியில் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள்(52). உறவினர்களான இவர்கள் இருவருக்கும் இடையே இடம் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயலட்சுமி தன்னுடைய இடத்தில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டியுள்ளார். அப்போது அங்கு வந்த கலியபெருமாள், இடத்தை அளந்த பின்புதான் வீடு கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் விஜயலட்சுமிக்கும், கலியபெருமாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
5 பேர் மீது வழக்கு
அப்போது அங்கு விஜயலட்சுமியின் மகன்களான முருகன்(28), பிரபு(25) ஆகியோரும், கலியபெருமாளின் மகன் மணிகண்டனும்(30) வந்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் இருதரப்பை சேர்ந்த விஜயலட்சுமி, முருகன், பிரபு மற்றும் கலியபெருமாள், மணிகண்டன் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story