புத்துணர்வு பெற இயற்கை சிகிச்சை மையத்துக்கு சென்ற சித்தராமையா


புத்துணர்வு பெற இயற்கை சிகிச்சை மையத்துக்கு சென்ற சித்தராமையா
x
தினத்தந்தி 22 Aug 2021 3:40 AM IST (Updated: 22 Aug 2021 3:40 AM IST)
t-max-icont-min-icon

புத்துணர்வு பெற இயற்கை சிகிச்சை மையத்துக்கு சித்தராமையா சென்றுள்ளார். அங்கு அவர் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற இருக்கிறார்.

பெங்களூரு:

இயற்கை சிகிச்சை மையத்தில்...

  கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா, ஆண்டுதோறும் இயற்கை சிகிச்சை மையத்தில் சேர்ந்து சிகிச்சை
பெறுவது வழக்கம். இதற்கு முன்பு தர்மஸ்தலாவில் உள்ள இயற்கை சிகிச்சை மையத்தில் சேர்ந்து சித்தராமையா சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி 10 நாட்கள் நடைபெற இருக்கிறது.

  சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பாக, அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சித்தராமையா சுற்றுப்பயணமும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கு தயாராகும் வகையில் இயற்கை சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெறவும், ஓய்வெடுக்கவும் அவர் முடிவு செய்திருந்தார்.

10 நாட்கள் சிகிச்சை

  அதன்படி, நேற்று பெங்களூரு துமகூரு ரோட்டில் உள்ள ஜிந்தால் இயற்கை சிகிச்சை மையத்தில் சித்தராமையா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் 10 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெறுவதுடன், ஓய்வும் எடுக்க உள்ளார். அதாவது வருகிற 31-ந் தேதி வரை இயற்கை மையத்தில் தங்கி இருந்து சித்தராமையா சிகிச்சை பெற இருக்கிறார். இந்த 10 நாட்களும் அவர் பொதுமக்கள் யாரையும் சந்திக்க மாட்டார். முக்கியமான பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே கட்சி தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார்.

  இயற்கை சிகிச்சை மையத்தில் சித்தராமையாவுக்கு உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி
உள்ளன.

Next Story