கேரள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்
சேலத்தில் கேரள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடினர்.
சேலம், ஆக.22-
கேரளாவில் ஓணம் பண்டிகையை மக்கள் வெகுசிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு அங்கு ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடப்படவில்லை என்று கூறப்படுகிறது. சேலத்தில் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். ஓணம் பண்டிகையையொட்டி சேலத்தில் வசித்து வரும் கேரள மக்கள் நேற்று தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர்.
சேலம் சங்கர் நகர், அழகாபுரம், சுவர்ணபுரி, 5 ரோடு, மெய்யனூர், பழைய பஸ் நிலையம் என மாநகரில் பல்வேறு இடங்களில் வசித்து வரும் கேரள மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். சங்கர் நகரில் உள்ள கேரளா சமாஜத்தில் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டும் நடனம் ஆடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். சேலம் குரங்குச்சாவடி சாஸ்தா நகர் அய்யப்பன் கோவில், சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. மேலும் அங்கு மலர்களால் அத்தப்பூ கோலமிடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story