தாம்பரத்தில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
தாம்பரத்தில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க. பார்வையாளர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்துக்காக இந்து முன்னணியினர் மேடை அமைத்தனர். அதை அகற்றும்படி போலீசார் கூறியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story