பழையகாயலில் நடந்த விபத்தில் வங்கி ஊழியர் படுகாயம்
பழையகாயலில் நடந்த விபத்தில் வங்கி ஊழியர் படுகாயம் அடைந்தார்
ஆறுமுகநேரி:
பழையகாயல் செபஸ்தியார் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் மகன் ஆனந்தராமன் (வயது 48). இவர் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை ஏரலில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தனது மனைவி அந்தோணியம்மாளுடன் மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் பழையகாயல் திரும்பி வந்து கொண்டிருந்தார்். பழையகாயல் பஜாரிலிருந்து தனது வீடு உள்ள தெருவிற்கு திரும்பும்போது எதிரே வந்த மோட்டார்சைக்கிள், அனந்தராமன் மோட்டார் சைக்கிள் மீது ேமாதியது. இதில் ஆனந்தராமனுக்கு மூக்கு, தோள்பட்டை, கால் போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எதிரே மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் முக்காணியை சேர்ந்த காளிமுத்து (52) என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story