பள்ளிப்பட்டு பேரூராட்சியில் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி கிடக்கும் கழிவறைகள்
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமலே பூட்டி கிடக்கின்றன. அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2017-2018 ஆண்டு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் செலவில் பொதுமக்கள் பயன்படுத்த பொது கழிவறைகள் கட்டப்பட்டன.
பள்ளிப்பட்டு சுடுகாடு உள்ள பகுதி, பள்ளிப்பட்டு நகரி சாலை ஆஞ்சநேய நகர், ஈச்சம்பாடி காலனி, புதுப்பட்டு பஸ்நிலையம் அருகே மற்றும் புதுப்பட்டு கிராமம் என 5 இடங்களில் என மொத்தம் ரூ.9 லட்சத்தில் பொது கழிவறைகள் கட்டப்பட்டன.
ஆனால் இந்த கழிவறைகள் கட்டப்பட்ட நாள் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமலே பூட்டி கிடக்கின்றன.
இதனால் இவை பழுதடைந்து காணப்படுகிறது. இவற்றை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை அந்த பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
Related Tags :
Next Story