வங்கி மேலாளரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
செங்கல்பட்டில் தனியார் வங்கியில் கிளை மேலாளரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு,
சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்ற கார்த்திகேயன் தனது மோட்டார் சைக்கிளை வங்கியின் வெளியே நிறுத்திவிட்டு பணிக்கு சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
வங்கியில் இருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்மநபர் ஒருவர் கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசில் கார்த்திகேயன் கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு டவுன் போலீசார் மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story