கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
கஞ்சா விற்றதாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பம்:
கம்பம் ஏகலூத்து சாலையில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மின் வாரிய அலுவலகம் அருகே சந்தேகப்படும்படியாக பையுடன் நின்றிருந்த பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சிவனம்மாள் (வயது 37) என்பதும், விற்பனைக்காக பையில் 1 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவனம்மாளை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கம்பம் கூடலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே கஞ்சா விற்ற கூடலூர் கன்னிகாளிபுரத்தை சேர்ந்த விக்னேஷ் குமாரை(24) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல வருசநாடு போலீசார் நேற்று சிங்கராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே கஞ்சா விற்ற அதே ஊரை சேர்ந்த சின்னசாமியை (40) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story