காதல் திருமணம் செய்ததால் முன்விரோதம் தாய்-மகன் மீது தாக்குதல் 10 பேர் கைது


காதல் திருமணம் செய்ததால் முன்விரோதம்  தாய்-மகன் மீது தாக்குதல்  10 பேர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2021 9:35 PM IST (Updated: 22 Aug 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் தாய், மகன் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.


போடி:
போடி அருகே உள்ள எரணம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவரது மகன் சூரியபிரகாஷ் அதே ஊரை சேர்ந்த காந்திராஜா(50) என்பவரின் அக்காள் மகள் கவுசல்யாவை காதலித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் முருகனுக்கும், காந்திராஜாவுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. 
இந்நிலையில் காந்திராஜா, உறவினர்கள் சந்திரகுமார் (35), ரீகன் (25), சரவணன் (28), பிரேம்குமார் (38) உள்பட 10 பேர் சேர்ந்து முருகன், அவரது தாயார் பத்ரகாளி (65) ஆகியோரை தாக்கி  கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து காயம் அடைந்த முருகனும், பத்ரகாளியும் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இது குறித்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திராஜா, சந்திரகுமார் உள்பட 10 பேரையும் கைது செய்தனர்.




Next Story