ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் விழா
ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் விழா நடந்தது.
தர்மபுரி:
ஆவணி அவிட்டத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பிராமணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர். தர்மபுரி மாவட்ட பிராமணர்கள் சங்கம் சார்பில் பூணூல் மாற்றும் விழா தர்மபுரி அருணாச்சல ஐயர் சத்திரம் மற்றும் தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சங்க தலைவர் வக்கீல் சாய்ராம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஏராளமான பூணூல் மாற்றிக் கொண்டனர். இதேபோன்று தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பிராமணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர்.
Related Tags :
Next Story