4 வழிச்சாலை பணிகள் 25 சதவீதம் நிறைவு


4 வழிச்சாலை பணிகள் 25 சதவீதம் நிறைவு
x
தினத்தந்தி 22 Aug 2021 10:28 PM IST (Updated: 22 Aug 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே மேற்கொள்ளப்படும் 4 வழிச்சாலை பணிகள் 25 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே மேற்கொள்ளப்படும் 4 வழிச்சாலை பணிகள் 25 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 வழிச்சாலை

பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 ஆயிரத்து 649  கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கோலார்பட்டி, கெடிமேடு உள்ளிட்ட பகுதிகளில் இடையூறாக இருந்த கட்டிடங்கள், மரங்கள் அகற்றப்பட்டு உள்ளன.

விபத்துக்களை தடுக்கும் வகையில் கிராம சாலைகள் சந்திக்கும் பகுதி மற்றும் விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளில் மேம்பாலங் கள் அமைக்கப்படுகிறது. இதற்கிடையில் நல்லாம்பள்ளி பிரிவில் மேம்பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

உயர்மட்ட பாலங்கள்

பொள்ளாச்சி-கோவை ரோடு ஆச்சிப்பட்டியில் இருந்து திண்டுக்கல் கமலாபுரம் வரையில் 131.96 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச் சாலையுடன் அதிவிரைவு சாலை அமைக்கப்படுகிறது. போக்கு வரத்து நெரிசல், விபத்துக்களை தடுக்க 80 சதவீதம் புறவழிச் சாலையாக அமைக்கப்படுகிறது. 

மடத்துக்குளம் அமராவதி ஆறு, பழனி சண்முகா நதி ஆகிய வற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்படுகிறது. 2 ரெயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிக சிறு பாலங்கள் அமைக்கப்படுகிறது. 

25 சதவீதம் முடிவு 

தற்போது சாலை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 25 சதவீத பணிகள் நிறைவு பெற்று உள்ளது. பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story