தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை


தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Aug 2021 10:38 PM IST (Updated: 22 Aug 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

பொள்ளாச்சி

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

தனியார் நிறுவன மேற்பார்வையாளர்

பொள்ளாச்சி அருகே உள்ள கூளநாயக்கன்பட்டி பனமரத்து பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 25). இவர் தனியார் நிறுவன கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இன்ஸ்டகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஓராண்டாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

திருமண ஏற்பாடு

இந்த நிலையில் ரஞ்சித்குமாருக்கு அவரது உறவினர் பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதை யடுத்து திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்த திருமணத்தில் ரஞ்சித்குமாருக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. 

இதனால் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடிய வில்லை என்ற விரக்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்தார். 

ஆஸ்பத்திரியில் அனுமதி 

இதை பார்த்த பெற்றோர், எதற்காக வாந்தி எடுக்கிறாய் என்று கேட்டனர். அதற்கு அவர், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் எலி மருந்தை சாப்பிட்டதாகவும் கூறினார். 

உடனே அவரை பெற்றோர் மீட்டு, உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். 

பரிதாப சாவு 

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story