வடமாநிலங்களுக்கு தினமும் 3 லட்சம் இளநீர் அனுப்பி வைப்பு
பொள்ளாச்சி பகுதியில் இருந்து வட மாநிலங்க ளுக்கு தினமும் 3 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.ஒரு டன் ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனை செய்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் இருந்து வட மாநிலங்க ளுக்கு தினமும் 3 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.ஒரு டன் ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனை செய்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இளநீர் உற்பத்தி
பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இதில் இருந்து உற்பத்தியாகும் இளநீர் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இளநீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதற்கிடையில் இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இது குறித்து ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-
3 லட்சம் ஏற்றுமதி
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் இருந்து தற்போது டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரேதம், ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு இளநீர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஒரு லட்சம் இளநீர் தான் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்து வருவதால் தினமும் 3 லட்சம் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடும் கிராக்கி
இதற்கிடையில் பொள்ளாச்சி இளநீருக்கு வடமாநிலங்களில் கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு வெட்டிய இளநீரை முன்கூட்டியே வெட்டி எடுத்து செல்ல வேண்டிய உள்ளது. இதனால் இளநீரின் சுவை குறையாது. எடை மட்டும் சற்று குறைவாக இருக்கும்.
நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ரக ஓட்டு இளநீர் ரூ.28 என விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது இளநீரின் தேவை அதிகரித்து உள்ளதால் தமிழகத்தை விட வட மாநிலங் களுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது.
ஒரு டன் ரூ.11 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எந்த காரணத்தை கொண்டும் தரமான இளநீரை குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story