நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,379 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,379 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2021 11:09 PM IST (Updated: 22 Aug 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 48 ஆயிரத்து 332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே நேற்று மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது.

527 பேருக்கு சிகிச்சை

இதற்கிடையே நேற்று 41 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 387 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 465 பேர் பலியான நிலையில் 527 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும் மூன்றாம் அலையை தடுக்கும் வகையில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story