பழனி அருகே தீயில் கருகி 4 பேர் பலியான சம்பவத்தில் மர்மம் நீடிப்பு
பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி இறந்த சம்பவத்தில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக உறவினர்கள், நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி இறந்த சம்பவத்தில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக உறவினர்கள், நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயில் கருகி சாவு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 52). விவசாயி. அவருடைய மனைவி வளா்மதி (42). இந்த தம்பதிக்கு சிவரஞ்சனி (21) என்ற மகளும், காா்த்திேகயன் (18) என்ற மகனும் இருந்தனா். இவா்கள் ஊருக்கு அருகில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி அதிகாலை 2 மணி அளவில் சின்ராஜ் தோட்டத்து பகுதியில் இருந்த சோளத்தட்டை படப்பு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்ேபாது அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது சோளத்தட்டை படப்புக்குள் எரிந்த நிலையில் சின்ராஜ் உள்பட 4 பேரும் பிணமாக கிடந்தனர்.
கொலையா?, தற்கொலையா?
இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்ராஜ் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது தற்கொலை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று சின்ராஜ் வீட்டின் அருகே வசித்தவர்கள், அந்த குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்கள், கிராம மக்கள் என சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக சின்ராஜின் உறவினர்கள், மகன் கார்த்திகேயனின் நண்பர்கள் ஆகியோரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
மர்மம் நீடிப்பு
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரேத பரிசோதனையில் இறந்தவர்கள் அனைவரின் சுவாசகுழாயில் புகை இருந்துள்ளதும், மயக்க நிலையில் இருந்தபோது தீப்பிடித்து இறந்துள்ளதும் தெரிகிறது. மேலும் சின்ராஜிக்கு தூக்கமின்மை, மனஅழுத்த பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக அவர் மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
மேலும் சின்ராஜின் மகன் கார்த்திகேயனுக்கும் சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. இதனால் அவர்கள் விஷம் அருந்தி, அதன்பின்னர் சோளத்தட்டை படப்பில் தீவைத்து தற்கொலை செய்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.
இதைத்தவிர குடும்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்ற அடிப்படையில் உறவினர்கள், அக்கம்பக்கத்து தோட்டக்காரர்கள் மற்றும் கார்த்திகேயன், சிவரஞ்சனி ஆகியோரின் நண்பர்களிடமும் விசாரணை நடக்கிறது. ஆனால் தற்போது வரை எந்தவித ஆதாரபூர்வமான தகவலும் கிடைக்கவில்லை. இதனால் இந்த சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது என்றார்.
Related Tags :
Next Story