வழக்கின் அனைத்து உண்மைகளையும் தீவிரமாக விசாரிக்கிறோம்-போலீஸ் துணை சூப்பிரண்டு பேட்டி


வழக்கின் அனைத்து உண்மைகளையும் தீவிரமாக விசாரிக்கிறோம்-போலீஸ் துணை சூப்பிரண்டு பேட்டி
x
தினத்தந்தி 23 Aug 2021 12:42 AM IST (Updated: 23 Aug 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் பெண்களை சீரழித்த சம்பவம் ெதாடர்பான வழக்கின் அனைத்து உண்மைகளையும் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என போலீஸ் துணை சூப்பிரண்டு கூறினார்.

காரைக்குடி,

சுபநிகழ்ச்சிகளில் வரவேற்பாளர் வேலைக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை பாலியல் சம்பவங்களில் ஈடுபடுத்தியதாக அறந்தாங்கியை சேர்ந்த ராஜா (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து காரைக்குடி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜூ கூறியதாவது:-
ராஜாவுடன் இணக்கமாக இருந்த பெண் ஒருவரை வி.ஐ.பி ஒருவரிடம் அனுப்பி வைத்துள்ளார். அப்பெண் அவருடன் உல்லாசமாக இருந்தபோது, ராஜா அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அப்பெண்ணை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தஞ்சாவூரில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
அவர் தற்போது காரைக்குடி அருகே அமராவதிபுதூர் அருகே வசித்து வருகிறார். இவர் மீது தஞ்சாவூரில் கொலை வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரும் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் வசிக்கும், தேவகோட்டை போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ள ஒருவரும் சேர்ந்து, வீடியோ விவகாரத்தை போலீசில் தெரிவித்துவிடுவோம் என்று ராஜாவை மிரட்டி பணம் கேட்டு உள்ளனர்.பின்னர் ராஜா வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், 2 தங்க மோதிரங்கள், ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.27 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவர்களை விரட்டிவிட்டனர்.
அங்கிருந்து தப்பிய ராஜா, இந்த சம்பவம் குறித்து சாக்கோட்டை போலீசில் புகார் கூறியுள்ளார். அதன்பேரில் அங்கிருந்த போலீஸ்காரர், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் செல்போனில் விசாரித்துள்ளார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்பேரில் போலீசார் இந்த வழக்கில் உள்ள அனைத்து உண்மைகளையும் தீவிரமாக விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.



Next Story