தினமும் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி. கலெக்டர் உத்தரவு


தினமும் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி. கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 23 Aug 2021 12:48 AM IST (Updated: 23 Aug 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

தினமும் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி. கலெக்டர் உத்தரவு

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு நிரந்தர தடுப்பூசி மையம், ஆரம்ப, நகர்புற சுகாதார மையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 5 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து உள்ளாட்சி அமைப்பினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனாலும் பலர் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. 

வேலூர் மாவட்டத்தில் சுமார் 11 லட்சம் பேர் 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆவர். தற்போது மாவட்டம் முழுவதும் தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சுமார் 6 லட்சம் பேர் முதல் டோஸ் இன்னும் எடுத்து கொள்ளவில்லை. அதனால் மாவட்டம் முழுவதும் தினமும் கூடுதல் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். 

அதன்படி வேலூர் மாநகராட்சி பகுதியில் 5 ஆயிரம் பேருக்கும், நகராட்சிகளில் 2,500 பேருக்கும், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் 1,000 பேருக்கு குறையாமல் தினமும் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதையொட்டி கூடுதல் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story