1 மணி நேரம் கன மழை
ராஜபாளையத்தில் 1 மணி நேரம் பெய்த கன மழையினால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் 1 மணி நேரம் பெய்த கன மழையினால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
கனமழை
ராஜபாளையத்தில் நேற்றுமுன்தினம் லேசான மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடிக்க தொடங்கியது. இதையடுத்து இரவு 7 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்ல, செல்ல கன மழையாக பெய்தது. காற்றும் வேகமாக வீசியது. இதில் ராஜபாளையம் மகப்பேறு மருத்துவமனையில் உள்ள பெரிய மரம் ஒன்று சாய்ந்தது.
ராஜபாளையத்தில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துவிழுந்தன.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின்தடையும் ஏற்பட்டது. மின்தடை ஏற்பட்டதால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கின. மின்வாரிய ஊழியர்கள் விரைந்து மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
அதேபோல போலீசார் விரைந்து வந்து காந்தி சிலை ரவுண்டானா அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Related Tags :
Next Story