மரங்களை வெட்டி கடத்திய 5 லாரிகள் பறிமுதல்
ஏற்காட்டில் இருந்து மரங்களை வெட்டி கடத்திய 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்காடு, ஆக.23-
சேலம் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி மற்றும் போலீசார் நேற்று காலை ஏற்காடு மலைப்பாதையில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மரங்களை ஏற்றி கொண்டு 5 லாரிகள் வந்தன. அவற்றை போலீசார் நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அந்த லாரிகளில் இருந்த மரங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த லாரிகளை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து ஏற்காடு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story