மாவட்ட செய்திகள்

விற்பனைக்காக சாராயம் வைத்திருந்தவர் மீது வழக்கு + "||" + Case against the possessor of alcohol for sale

விற்பனைக்காக சாராயம் வைத்திருந்தவர் மீது வழக்கு

விற்பனைக்காக சாராயம் வைத்திருந்தவர் மீது வழக்கு
விற்பனைக்காக சாராயம் வைத்திருந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தலைமையிலான போலீசார் வாரியங்காவல், தேவனூர், வடக்கு புதுக்குடி ஆகிய இடங்களில் மது மற்றும் சாராயம் விற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களில் எவரேனும் ஈடுபடுகின்றனரா? என்று கண்காணித்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் புதுக்குடி கிராமத்தில் சிவகுமார் என்பவரது வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பிளாஸ்டிக் கேனில் சுமார் ஒரு லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. அதனை முகர்ந்து பார்த்தபோது நெடியுடன், துர்நாற்றம் வீசியது. மேலும் அதை குடித்தால் மனித உயிருக்கு தீங்கு ஏற்படும் என்பதால், அதனை கைப்பற்றி கீழே கொட்டி அழிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகுமார் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரெயில்வேயில் வேலை வாங்க முயன்ற தாய்-மகன் மீது வழக்கு
போலி ஆவணம் கொடுத்து ரெயில்வேயில் வேலை வாங்க முயன்ற தாய்-மகன் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
3. மணல் மூட்டைகள் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல்; வாலிபர் மீது வழக்கு
மணல் மூட்டைகள் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல் செய்யப்பட்டு, வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4. மரத்தில் தழை ஒடித்ததில் தகராறு; இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
மரத்தில் தழை ஒடித்ததில் தகராறு தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.