முசிறியில் புகையிலை பொருட்கள்-மதுபாட்டில்கள் பறிமுதல்


முசிறியில் புகையிலை பொருட்கள்-மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Aug 2021 2:25 AM IST (Updated: 23 Aug 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

முசிறியில் புகையிலை பொருட்கள்-மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

முசிறி
முசிறியில் பழைய பஸ் நிலையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி பழைய பஸ் நிலைய வளாகத்தில் போலீசாருடன் தீவிர சோதனை நடத்தினார். அப்போது பஸ் நிலையத்தின் உள்ளே படிக்கட்டுக்கு கீழே புகையிலை பொருட்கள் மற்றும் 45 டாஸ்மாக் மது பாட்டில்களை மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மது பாட்டில்கள் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story