வீட்டின் வெளியே நின்ற விலை உயர்ந்த நாய் குட்டியை திருடிச் சென்ற மர்மநபர்கள்


வீட்டின் வெளியே நின்ற விலை உயர்ந்த நாய் குட்டியை திருடிச் சென்ற மர்மநபர்கள்
x
தினத்தந்தி 23 Aug 2021 11:49 AM IST (Updated: 23 Aug 2021 11:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விருகம்பாக்கம், தாராசந்த் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர், தனது வீட்டில் விலை உயர்ந்த நாய் குட்டியை வளர்த்து வந்தார். அவரது வீட்டின் வெளியே நின்றிருந்த நாய் குட்டி திடீரென மாயமானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது விலை உயர்ந்த நாய் குட்டியை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதில் ஒருவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நபர்போல் சீருடை அணிந்து இருந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story