திருப்பூர் மாவட்டத்தில் 500 நகைக்கடை உரிமையாளர்கள் 2½ மணி நேரம் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர் மாவட்டத்தில் 500 நகைக்கடை உரிமையாளர்கள் 2½ மணி நேரம் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தினத்தந்தி 23 Aug 2021 9:46 PM IST (Updated: 23 Aug 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 500 நகைக்கடை உரிமையாளர்கள் 2½ மணி நேரம் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், 
தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாவட்டத்தில் 500 நகைக்கடை உரிமையாளர்கள் 2½ மணி நேரம் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
எதிர்ப்பு 
தங்க நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண்ணை (எச்.யு.ஐ.டி.) பதிவு செய்ய வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.) அறிவித்திருக்கிறது. இதற்கு தங்க நகை விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தங்க நகைக்கடை உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 500 நகைக்கடைகள் நேற்று காலை 9 மணி முதல் காலை 11.30 மணி வரை 2½ மணி நேரம் கடையடைப்பு செய்திருந்தனர். 
2½ மணி நேரம் கடைகள் அடைப்பு 
திருப்பூர் மாநகரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நகைக்கடைகள் பல அடைக்கப்பட்டிருந்தன. இந்த போராட்டத்தை விளக்கும் விதமாக சிலர் விளம்பர பதாகைகளையும் கடைகள் முன்பு வைத்திருந்தனர். நகைக்கடை உரிமையாளர்களின் இந்த போராட்டம் குறித்து விவரம் தெரியாத வாடிக்கையாளர்கள் பலரும் கடைகளுக்கு வந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
சிலர் காத்திருந்து நகைகளை வாங்கி சென்றனர். தற்போது அடையாளமாக இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றாதபட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். 
 உடுமலை
இதுபோல் உடுமலையில் சுமார் 100 நகைக்கடைகள் உள்ளன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி உடுமலையில் நேற்று அனைத்து பகுதிகளில் உள்ள நகைக்கடைகளும் காலை 9 மணிமுதல் 11.30 மணிவரை 2½ மணிநேரம் அடைக்கப்பட்டிருந்தன. 
அத்துடன் அனைத்து நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் உடுமலையில் நகைக்கடை வீதி என்று அழைக்கப்படும் பி.வி.கோவில் வீதியில் கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைளை கைகளில் ஏந்தி வரிசையாக நின்றிருந்தனர். 
இதற்கு உடுமலை நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் கே.மணியன், செயலாளர் என்.ரவிச்சந்திரன், பொருளாளர் ஏ.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story