மடத்துக்குளம் பகுதியில் ஓடைப்புறம்போக்கு பகுதியில் தனியார் நிறுவனம் மேற்கொண்டிருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது.

மடத்துக்குளம் பகுதியில் ஓடைப்புறம்போக்கு பகுதியில் தனியார் நிறுவனம் மேற்கொண்டிருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது.
x
தினத்தந்தி 23 Aug 2021 9:49 PM IST (Updated: 23 Aug 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் ஓடைப்புறம்போக்கு பகுதியில் தனியார் நிறுவனம் மேற்கொண்டிருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது.

போடிப்பட்டி,
மடத்துக்குளம் பகுதியில் ஓடைப்புறம்போக்கு பகுதியில் தனியார் நிறுவனம் மேற்கொண்டிருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது.
மழைநீர் ஓடை
மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியில் மழைநீர் ஓடை ஒன்று உள்ளது.உடுமலையையடுத்த ராஜாவூரிலிருந்து தொடங்கும் இந்த ஓடை சோழமாதேவி பகுதியில் அமராவதி ஆற்றில் கலக்கிறது. மழைநீர் மற்றும் உபரி நீர் வழித்தடமாக உள்ள இந்த ஓடையை ஒட்டிய ஓடைபுறம்போக்கு நிலத்தை மைவாடி பகுதியில் உள்ள தனியார் கிரஷர் நிறுவனம் ஒன்று ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் யோகானந்தம் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதனடிப்படையில் அந்த இடம் ஆய்வு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
போலீசார் குவிப்பு
ஆனாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததைத் தொடர்ந்து நேற்று மடத்துக்குளம் தாசில்தார் ஜலஜா, துணை தாசில்தார் குணசேகரன் ஆகியோர் அங்கு சென்று பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.அப்போது கிரஷர் உரிமையாளர் அளவீடு செய்வதில் சில சந்தேகங்கள் உள்ளது.  
 அதுகுறித்து விளக்க வேண்டும் என்று கூறி ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. 

Next Story