திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
x
தினத்தந்தி 23 Aug 2021 9:54 PM IST (Updated: 23 Aug 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்
திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு
பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளையொட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாடகை வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் அளித்த மனுவில், ‘கொரோனா ஊரடங்கால் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்களுக்கு இரண்டு காலாண்டு வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். வாகனங்களின் மீதான ஆன்லைன் மூலம் வாகனங்களின் விவரம் என்ன என்பதை ஓட்டுனரிடம் விசாரிக்காமல் அபராதம் போடுவதை தவிர்த்து ஓட்டுனர் நலன் காக்க வேண்டும். வாடகை வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய மாத தவணைத்தொகையை செலுத்த 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநகர் மாவட்ட துணை செயலாளர் தம்பி வெங்கடாசலம் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘திருப்பூர் 15 வேலம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே 7 சென்ட் அளவுள்ள அரசுக்கு சொந்தமான கிராம நத்தம் காலி பொது இடம் உள்ளது. இந்த இடத்தில் பொதுமக்கள் சார்பாக மின்சார அலுவலகம், மக்கள் மருந்தகம் அமைக்க கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த 1 வருடமாக அரசு உபயோகப்படுத்தப்படாமல் அந்த கட்டிடம் காலியாக இருந்தது. தற்போது 1 மாதத்துக்கு முன்பு தனி நபர்கள், அறக்கட்டளை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட இடத்தை பட்டா பெறுவதற்கான முயற்சி நடந்துவருகிறது. அந்த இடத்தை கையகப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றி அரசு அலுவலக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’ என்றுகூறியுள்ளனர்.
சுமைப்பணி தொழிலாளர்கள்
திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) அளித்த மனுவில், ‘உடலுழைப்பு தொழிலாளர்களில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் தனியாக நல வாரியம் அவசியம். உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஆன்லைனில் பதிவு நடந்து வருகிறது. கேரளாவில் உள்ளது போல் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Next Story