அர்ப்பணிப்பு-சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்
அர்ப்பணிப்பு-சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று புதிதாக பணியில் உள்ள உள்ள சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்தினார்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தேர்வான 35 பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், போலீஸ், மருத்துவம், கல்வி ஆகிய 3 துறைகளும் முக்கியமானவை. அனைவரும் போலீஸ் துறையில் சேர முடியாது. புனிதமான போலீஸ் துறையில் பணியாற்ற அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை அவசியம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் மக்கள் நாடுவது போலீஸ் துறையை தான். நீங்கள் பல்வேறு போட்டிகளை சந்தித்து அவற்றில் வெற்றிபெற்று சப்-இன்ஸ்பெக்டராகி இருக்கிறீர்கள்.
நீங்கள் பெறும் பயிற்சியே உங்களை சிறந்த அதிகாரியாக செதுக்கும். எனவே நன்றாக பயிற்சி பெற வேண்டும். மேலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி போலீஸ் துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும். இதேபோல் பணியின் போது அனைவரிடமும் பண்புடன் பழக வேண்டும். பொதுமக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story