அரசு பஸ் மோதி வாலிபர் பலி


அரசு பஸ் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 23 Aug 2021 10:07 PM IST (Updated: 23 Aug 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலியானார்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 27). வெளிநாட்டில் வேலை செய்த இவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். 

நேற்று இவர், தனது சொந்த வேைல காரணமாக மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, மீண்டும் காசம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

நத்தம்-மதுரை சாலையில் உள்ள வேம்பரளி பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரை நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ஆனந்தகுமார் பரிதாபமாக இறந்தார். மேலும் விபத்தில் சிக்கிய ஆனந்தகுமாரின் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது. இதில், அது முற்றிலும் எரிந்து நாசமானது.
 
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

 பின்னர் ஆனந்தகுமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story