மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ரிஷிவந்தியம் அருகே மின்கம்பத்தில் ஏறி ஒயரை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே அவிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் அருள்ஜோதி (வயது 32) விவசாயி. நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள இவரது உறவினர் வீட்டில் திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதையறிந்த அருள்ஜோதி உறவினர் வீட்டுக்கு செல்லும் ஒயரில் பழுது ஏதும் உள்ளதா என்பதை கண்டறிய அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அருள்ஜோதி தூக்கி வீசப்பட்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அருள்ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் விசாரணை
பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அருள்ஜோதி பரிதாபமாக இறந்தார். இது குறித்துஅருள்ஜோதி மனைவி நித்தியா (28) அளித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story